வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் மானிப்பாய், அருள்மிகு மருதடி விநாயகர் திருக்கோயில்

மலைப்பில்லா மனம் தந்து வழிகாட்டும் விநாயகரே
தடுமாறா மனம் தந்து வழிநடத்த வேண்டுமைய்யா
திடமான மனம் தந்து எங்களை நீ வாழவைப்பாய்
மானிப்பாய் கோயில் கொண்ட மருதடி விநாயகரே

மகிழ்ச்சி கொண்ட வாழ்வு தந்து வழிகாட்டும் விநாயகரே
வலிமை மிகு மனம் தந்து வழிநடத்த வேண்டுமைய்யா
முயற்சியுடன் முன்னேறும் அறிவு தந்து எங்களை நீ வாழவைப்பாய்
மானிப்பாய் கோயில் கொண்ட மருதடி விநாயகரே

எழுச்சி கொண்டு நாம்வாழ வழி காட்டும் விநாயகரே
ஏமாற்றம் அண்டா நிலைதந்து வழிநடத்த வேண்டுமைய்யா
எழுச்சிமிகு மனம் தந்து எங்களை நீ வாழவைப்பாய்
மானிப்பாய் கோயில் கொண்ட மருதடி விநாயகரே
வளம் கொண்ட தமிழ் மண்ணில் இருந்து வழிகாட்டும் விநாயகரே
வற்றாத கருணையினை தந்து வழிநடத்த வேண்டுமைய்யா
வெகுளாத மனம் தந்து எங்களை நீ வாழவைப்பாய்
மானிப்பாய் கோயில் கொண்ட மருதடி விநாயகரே
எங்கும் என்றும் உடனிருந்து வழிகாட்டும் விநாயகரே
ஏற்றமிகு வாழ்வு தந்து வழிநடத்த வேண்டுமைய்யா
வெற்றி மனம் தந்து எங்களை நீ வாழவைப்பாய்
மானிப்பாய் கோயில் கொண்ட மருதடி விநாயகரே
தீயபகை வஞ்சனைகள் கடந்து செல்ல வழி காட்டும் விநாயகரே
தொல்லையில்லா வாழ்வு தந்து வழிநடத்த வேண்டுமைய்யா
தெளிவான அறிவு தந்து எங்களை நீ வாழவைப்பாய்
மானிப்பாய் கோயில் கொண்ட மருதடி விநாயகரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
