தென் கொரியாவின் பிரபல பொப் இசைப் பாடகரும் நடிகருமான முன்பீன்( Moonbin) உயிரிழந்துள்ளார்.
25 வயதான முன்பீன் தலைநகர் சோலின் ஆகன்க்நமின் என்ற இடத்திலுள்ள தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரது முகாமையாளர் நேற்றைய தினம் முன்பீனுக்கு பல தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட போது, அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் அதன்பின்னர் தேடி பார்த்த போது, அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவினாலும் மரணத்துக்கான காரணத்தை அறிய சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தென்கொரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
