பேஸ்புக் ஊடக வலையமைப்பின் உரிமை நிறுவனமான மெட்டா பிளட்போம்ஸ் நிறுவனமானது, மீண்டும் தமது நிறுவனத்தில் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதென சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெக், தனது வர்த்தக செயற்பாட்டை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளார் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் 10,000 பணியாளர்களை அங்கிருந்து பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளதாகவும் இந்தச் செயற்பாடானது, பல மாதங்களாக திட்டமிடப்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மெட்டா நிறுவனமானது இதற்கு முன்னரும் தமது நிறுவனத்திலிருந்து 11,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
