கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டம், திருகோணமலை நகரம் அருள்மிகு சனீஸ்வரன் திருக்கோயில்

நன்மையும் தருவாய் தீமையும் செய்வாய்
நம்பினோரை என்றும் கைவிட மாட்டாய்
துன்பங்கள் தந்து அதைத் துடைத்தெறிவாய்
காக வாகனனே சனீஸ்வரா

திருமலை நகரில் கோயில் கொண்டாய்
தீமைகள் களைய வந்தமர்ந்தாய்
கேட்கும் வரங்களைத் தந்திடுவாய் நிம்மதியோடெம்மை வாழவைப்பாய்
காக வாகனனே சனீஸ்வரா
தர்மத்தைக் காக்க முன்னிற்பாய் அதர்மத்தை அழிக்க விரைந்திடுவாய்
காலத்தால் நன்மைகள் செய்திடுவாய்
காத்திருப் போரை காவல் செய்வாய்
காக வாகனனே சனீஸ்வரா
எள்ளிலும், எண்ணையிலும் உறைந்திடுவாய்
என்றும் உடனிருந்து காத்தருள்வாய்
நேர்மையாய் வாழவழி செய்வாய்
காக வாகனனே சனீஸ்வரா
கருமை நிறத்தில் உறைபவனே காவலாய் என்றும் இருப்பவனே
வருந்துயர் போக்க வந்திடுவாய்
வளமுடன் வாழவழி செய்வாய்
காக வாகனனே சனீஸ்வரா
விரதமிருந்து வழிபடுவோர் வினைகளைத் தீர்த்து அருளிடுவாய்
வெற்றிகள் தந்து வாழவைப்பாய்
விரைந் தெமக்கு அருள வந்திடுவாய்
காக வாகனனே சனீஸ்வரா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
