பதுளை பகுதியில் நேற்று மாலை பெய்த இடி மின்னலுடன் கூடிய கடும் மழையின் காரணமாக ஹப்புத்தளை, தம்பேதன்ன – மாக்காந்த பிரிவில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 21,42,17 வயதுடைய மூவர் ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் மூவரும் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராமு தனராஜா
