மாத்தளை – உக்குவெல பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெஹிதெனிய மற்றும் பல கிராமங்களுக்கு (08 கிராமங்களுக்கு) நேற்று கடும் காற்று மற்றும் கனமழை காரணமாக 33 வீடுகளுக்கு பாரிய மரங்கள் வீழ்ந்தமையினால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 31 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இச்சீரற்ற காலநிலை 33குடும்பங்களைச் சேர்ந்த 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . அத்துடன் இதில் ஆறு (06) குடும்பங்களைச் சேர்ந்த இருபதுபேர் (20) அயலவர் மற்றும் உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதம அதிகாரி திரு. அமரவீர அவர்கள் தெரிவித்தார்.

மாத்தளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதம அதிகாரி
Mr. Amaraveera
TP No. 773957890

