திருமண, பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை நாளை 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை தலவாக்கலை உப பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நடமாடும் சேவையின் ஊடாக பிறப்பு பதிவு செய்யப்படாதவர்களின் பிறப்பு பதிவு செய்யப்பட்டு அன்றைய தினம் பிறப்புச் சான்றிதழ் அல்லது அனுமான சான்றிதழ் வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட சான்றிதழ்களை பெறவிரும்புவோர் அன்றைய தினம் கலந்துகொள்ளுமாறு நுவரெலியா பிரதேச செயலக அலுவலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
