வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம்- யாழ்ப்பாணம்- ஆணைக்கோட்டை சாவற்காடு – அந்திக்குழி அருள்மிகு ஞானவைரவர் திருக்கோயில்
வளம் கொண்ட எம் மண்ணைக் காவல் செய்யும் பெருமானே
வரும் துன்பம் துடைத்தெறிந்து வாழவைக்க வரவேண்டும்
வீரமிகு மனநிலையை நாமடைய அருள்வாய்
சாவற்காடு வீற்றருளும் ஞான வைரவா நீயே துணை
நித்தமும் விழித்திருந்து காவல் செய்யும் பெருமானே
அதர்மங்கள் அண்டாமல் வாழ வைக்க வர வேண்டும்
அச்சமில்லா மனநிலையை நாமடைய அருள்வாய்
சாவற்காடு வீற்றருளும் ஞான வைரவா நீயே துணை
வட இலங்கைக் காவலனாய் இருக்கின்ற பெருமானே
வளம் பெற்று நாம்வாழ வழி அமைக்க வர வேண்டும்
ஆற்றல் கொண்ட மனநிலையை நாமடைய அருள்வாய்
சாவற்காடு வீற்றருளும் ஞான வைரவா நீயே துணை
அருஞ்சுனங்கள் அருகு கொண்டு காவல் செய்யும் பெருமானே
ஆதரித்து என்றுமெம்மை வாழவைக்க வர வேண்டும்
அமைதி கொண்ட மனநிலையை நாமடைய அருள்வாய்
சாவற்காடு வீற்றருளும் ஞான வைரவா நீயே துணை
அந்திக்குழி வைரவரென்ற நாமம் கொண்ட பெருமானே
அறநெறியில் நாம் வாழ வழி அமைக்க வர வேண்டும்
நிரந்தரமாய் நிம்மதி கொண்ட மனநிலையை நாமடைய அருள்வாய்
சாவற்காடு வீற்றருளும் ஞான வைரவா நீயே துணை
கொடிய மனம் படைத்தவரை அழித்தொழிக்கும் பெருமானே
தொல்லையின்றி நாம்வாழ வழி அமைக்க வர வேண்டும்
தெளிவான மனநிலையை நாமடைய அருள்வாய்
சாவற்காடு வீற்றருளும் ஞான வைரவா நீயே துணை.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
