உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 25 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஓலெஸ்கி ரெஸ்னிகோவ் வெள்ளிக்கிழமை ஒரு ஒன்லைன் செய்தி மாநாட்டில் தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய ஆதரவாளர்களால் கட்டுப்படுத்தப்படும் கிழக்கு நகரமான டொனெட்ஸ்கில், ஒரு மினிபஸ் மீது உக்ரைனிய ஷெல் தாக்குதலால் ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய அதிகாரி ஒருவர் கூறினார்.
ரஷ்யா வீசிய 23 குரூஸ் ஏவுகணைகளில் 21ஐ சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. மாஸ்கோ பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைக்கவில்லை என்று கூறியுள்ளது. போர்க்குற்றம், பொதுமக்களை அச்சுறுத்துவது மற்றும் காயப்படுத்துவது தவிர, முன் வரிசையில் இருந்து வெகு தொலைவில் உள்ள நகரங்கள் மீதான தாக்குதல்கள் இராணுவ நோக்கத்தை கொண்டிருக்கவில்லை என்று உக்ரைன் கூறுகிறது.
