பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆக்கரத்தனை கிரிகல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தும் தோட்டா ஆகியன சட்ட விரோதமாக முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி பதுக்கி வைத்துள்ளதாக ஆக்கரத்தனை பகுதியில் முகாம் இட்டுள்ள விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய உடன் அப்பகுதிக்கு விரைந்து குறித்த வீட்டை சுற்றி வளைத்து சோதனைக்கு உட்படுத்திய போது வீட்டில் மிகவும் சுட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த (shot gun) ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தும் தோட்டாக்கள் (9) ஆகியன விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி மற்றும் ஒன்பது தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் விஷேட அதிரடி படையினர்
பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சந்தேக நபரை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிசார் மேற்கொண்டு வருதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
