M.J அம்மாரின் இயக்கத்தில் “மலையவன்” குறுந்திரைப்படமானது இன்றைய தினம் (01) தலவாக்கலை ஒக்ஸ்போர்ட் கல்வியக கட்டடத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தலவாக்கலை கதிரேசன் ஆலய பிரதம குருக்கள் பிரசாத் சர்மா, தங்கமயில் ஜீவலரி ஸ்தாபகர் தேசபந்து தேசகீர்த்தி சாந்தகுமார், விஷ்ணு அறக்கட்டளையின் சிரேஷ்ட நிர்வாகி திரு தர்மராஜ், மலையகத்தின் குறுந்திரைப்பட இயக்குநர்கள், சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

உயர்தர மாணவரான அம்மார் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள இக்குறுந்திரைப்படத்தில் ஆசிரியர் சான் சதீஷ் முக்கிய கதாப்பாத்திரமேற்று நடித்துள்ளதோடு பிரமீதா, ரம்யா, சுதர்சன், சற்குணம், சதீஷ்குமார், அருளம்பலம், சமன் புஷ்பகுமார மற்றும் ஸ்ரீகாந் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் பிரதிக்ஷன், பிரேம்நாத், அனுஷ்பிரியன், ரிசோகுமார் மற்றும் கலைவாணன் ஆகியோர் இக்குறும்பட இயக்கத்தில் இணைந்து பணியாற்றியதோடு ஈஸ்வர் மீடியா ஒளிப்பதிவு செய்துள்ளது.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட பலரும் குறித்த மாணவனின் இக்கன்னி முயற்சியை பாராட்டினர். மலையகம்.lk யின் ஊடகப்பங்களிப்பில் இவ்வெளியீட்டு நிகழ்வானது இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

