பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆக்கரத்தனை கிரிகல பகுதியில் சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி இருவேறு வீடுகளில் துப்பாக்கிகள் வைத்திருப்பதாக பசறை ஆக்கரத்தனை விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் ஸ்தானத்திற்கு விரைந்து சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது சூட்சுமமான முறையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த shot gun ரக துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதோடு கிரிகல ஆக்கரத்தன்ன பகுதியை சேர்ந்த 44வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேலும் அதே பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளனர். இதன்போது 47 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்த விஷேட அதிரடிப் படையினர் இருவரையும் துப்பாக்கிகளையும் பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியரட்ணவின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறித்த இரு சந்தேக நபர்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
