2,000 ரூபா நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது.
மேலும் தற்போதுள்ள நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யலாம் அல்லது செப்டெம்பர் 30 ஆம் திக்திக்குள் மாற்றலாம் என அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்த நோட்டு தொடர்ந்து சட்டப்பூர்வமானதாக இருக்கும் என்றும், செப்டம்பர் 30, 2023 க்குள் அவற்றை மாற்றிக்கொள்ளுங்கள் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
செயற்பாட்டு வசதிக்காகவும், வங்கிக் கிளைகளின் வழக்கமான செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் மே 23, 2023 முதல் எந்த வங்கியிலும் ரூ.2,000 நோட்டுகளை ஏனைய மதிப்புகளின் வங்கி நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
எனவே, 2000 ரூபா நோட்டுகளை உடனடியாக வெளியிடுவதை நிறுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
