மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.21.05.2023.
கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் மாலை வேளையில் பெய்த கன மழையால் கென்யோன் நீர் தேக்கத்தில் அதிகளவில் குப்பைகள் நிறைந்து காணப்பட்டது.

இன்று காலை 8 மணி முதல் கென்யோன் நீர் மின் நிலைய பணியாளர்கள் மூலமாக இந்த நீர் தேக்கத்தின் வான் கதவுகள் மற்றும் நீர் தேக்கத்தின் கீழ் பகுதியில் உள்ள நீரை வெளியேற்றும் குழாய் வழியாக நீரை அகற்றி அந்த நீர் தேக்கத்தின் உள்ள அனைத்து குப்பைகள் அகற்ற பட்டு மீண்டும் நீர் நிரப்பும் பணி இடம் பெற்றது.

இதன் போது அந்த நீர் தேக்கத்தில் நிறைந்து கணப்பட்ட வனப் பகுதியில் இருந்து வந்த கழிவுகள் மற்றும் விறகு கட்டைகள் அப் பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களினால் வீசப்பட்ட பிலாஸ்டிக் பொருட்கள் மற்றும் பொலித்தீன் உறைகள் போன்றவை அகற்றி சுத்தபடுத்த பட்டது.
