புத்தல வக்குருவெல வயல் வெளியில் நின்று வா கொண்டிருந்த இருவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை மழையுடன் கூடிய இடி மின்னல் தாக்கத்திலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இவ்வனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் 30,32 வயதுடையவர்கள் என்பதுடன் இதில் ஒருவர் 1990 உயிர் காவு வண்டியின் சாரதி என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த இருவரின் சடலம் புத்தல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ராமு தனராஜா
