Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

July 30, 2026

மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

July 30, 2026

மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

July 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வாகனங்களை அடகு வைத்து மோசடி செய்த இரு இராணுவச் சிப்பாய்கள் தொடர்பில் பதுளை பொலீஸார் விசாரணை.
மலையகம்

வாகனங்களை அடகு வைத்து மோசடி செய்த இரு இராணுவச் சிப்பாய்கள் தொடர்பில் பதுளை பொலீஸார் விசாரணை.

ThanaBy ThanaMay 29, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பலரிடமிருந்து வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைத்து பணம் பெற்று மோசடி செய்த இரண்டு இராணுவ சிப்பாய்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரு இராணுவ வீரர்களில் ஒருவர் தற்போது சேவையில் உள்ளவர் எனவும் மற்றையவர் சேவையில் இருந்து தப்பியோடியவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பசறை பிபிலேகம பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபர்கள் இருவரும், பசறை எல்ல, வெலிமடை போன்ற பகுதிகளில் பலரிடமிருந்து மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் வான்களை வாடகைக்கு எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகன உரிமையாளர்களின் நம்பிக்கையை பெறும் வகையில், வாகனங்களுக்கான வாடகையை முதல் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு தவறாது நேர்மையாக செலுத்தி வந்துள்ளனர்.

அதன் பின் இரண்டு மூன்று மாதங்களுக்கு பிறகு குறித்த நபர்களிடமிருந்து வாடகை பணம் கிடைப்பதில்லை எனவும் அது தொடர்பில் விசாரிக்க அவர்களது கைபேசிக்கு அழைப்பை மேற்கொண்ட போது அவர்களது கைபேசி இலக்கங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் பதுளை பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பண்டாரவளை, தியத்தலாவ பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர்கள் இருவரும் வாகனங்களை வேறு தரப்பினரிடம் அடகு வைத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடகு வைக்கப்பட்ட 06 மோட்டார் சைக்கிள்கள், 03 முச்சக்கரவண்டிகள் மற்றும் 02 வான்கள் வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பண்டாரவளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இந்த வாகனங்களை வாடகை அடிப்படையில் 2 இலட்சம் முதல் 15 இலட்சம் வரை அடகு வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இவ்வாறு வாகனங்களை வாடகைக்கு வழங்கியவர்களில் பெரும்பாலானோர் இராணுவ ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இராணுவம், விமானப்படை விசேட அதிரடிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில், பதுளை மற்றும் பண்டாரவளை பொலிஸ் பிரிவுகள் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Arrested lk Lka Malayagam Malayagamlk
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026
    Editors Picks

    இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

    July 30, 2026

    மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

    July 30, 2026

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026

    வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

    July 30, 2026

    இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

    July 30, 2026

    மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

    July 30, 2026

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.