Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

July 30, 2026

மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

July 30, 2026

மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

July 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » புதிய பிரதேச செயலகங்கள் அங்குரார்ப்பணம் இன்று.
மலையகம்

புதிய பிரதேச செயலகங்கள் அங்குரார்ப்பணம் இன்று.

ThanaBy ThanaMay 29, 2023Updated:May 29, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.29.05.2023.

முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான மறைந்த அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மறைவோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலவீனமடைந்து விட்டது என சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இருந்த போதும் காங்கிரஸ் இன்னமும் பலமாகவே உள்ளது. இதற்கு எமது தற்போதைய அரசியல் சிறந்த சான்று. என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில், உள்ள தலவாக்கலை உப பிரதேச செயலகமும், நோர்வூட் உப பிரதேச செயலகமும் பிரதேச செயலகங்களாக இன்று முதல் தரமுயர்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதிய தரம் உயர்த்தப்பட்ட பிரதேச செயலகங்கள் திறந்து வைக்கும் நிகழ்வு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன், நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட, அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்ற செயலாளர்கள், கிராம, சமூர்த்தி, நலன்புரி ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இன்று தரம் உயர்த்தப்பட்ட செயலகங்களை திறந்து வைத்த பின்னர் உரையாற்றிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், கருத்து தெரிவிக்கையில்,

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர், உப செயலகத்தை திறந்து வைத்தபோது, அதற்கு எதிராக விமர்சனங்கள் பலராலும் முன்வைக்கப்பட்டன.

பிரதேச செயலகம் கோரும் நிலையில், உப செயலகம் எதற்கு எனவும் கேள்விகள் அரசியல் வாதிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஊடாக எழுப்பட்டன.

அந்த நேரத்தில் பிரதேச செயலகம் நிச்சயம் உருவாகும் என நாம் கூறினோம். அதனை இன்று செய்து முடித்து உள்ளோம். வழங்கிய வாக்குறுதிகளை நிறை வேற்றுவதும், சொல்வதை செய்வதும் தான் காங்கிரஸின் அரசியல் தந்திரமும் பலமாகும்.

ஆறுமுகம் தொண்டமான் மறைவோடு இராஜங்க அமைச்சு பதவி எமக்கு கிடைத்தபோது, காங்கிரஸ் பலவீனம் அடைந்துவிட்டது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நாம் அமைதி பேணிணோம் . மறைந்த தலைவர் காட்டிய வழியில் நாம் சென்று கொண்டு உள்ளோம்.
தற்போதைய தலைவர் கிழக்கு மாகாண ஆளுநராக இருக்கின்றார். நான் தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சு பதவியை வகிக்கிறேன். ஆக இருந்ததை விடவும் காங்கிரஸ் பலமாகவே உள்ளது.
எமது இந்திய வம்சாவளி மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றி வருவோம். அடுத்ததாக பல்கலைக்கழக விவகாரத்தையும் வெகு விரைவில் செய்து முடிப்போம்என்றார் தேசிய நீர் வடிகால் அமைச்சர் ஜீவன் தொண்டமான்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026
    Editors Picks

    இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

    July 30, 2026

    மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

    July 30, 2026

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026

    வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

    July 30, 2026

    இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

    July 30, 2026

    மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

    July 30, 2026

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.