190000 மில்லி லிட்டர் கோடா மற்றும் 5000 மில்லி லிட்டர் கசிப்பு ஆகியவற்றுடன் ஆங்கில ஆசிரியர் ஒருவரும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

ரிதிமாலியயெத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றும் இந்த ஆசிரியர் மஹியங்கனை திஸ்ஸபுர பிரதேசத்திற்கு கசிப்பு விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.சுஜித் வெதமுல்ல மற்றும் மஹியங்கனை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் டபிள்யூ.டபிள்யூ.சி.ஆர்.விஜேரத்ன ஆகியோரின் பணிப்புரையின் பேரில் ஊழல் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஜயசேகர (66024) உள்ளிட்ட குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
ராமு தனராஜா
