மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.31.05.2023.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் நேற்று முன்தினம் 12 மணியளவில் அத்தோட்டத்தில் உள்ள சாமிமலை ஓயாவில் நீராட சென்ற 52 வயது உடைய பாலன் தனலெட்சுமி தடுக்கி ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி பலியான சம்பவம் இடம்பெற்றது.

இவ்வாறு இறந்த நிலையில் இருந்த பெண்ணை மஸ்கெலியா பொலிஸ்சார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பிரேத பரிசோதனையின் பின்னர் இறந்த பெண் கடந்த முப்பது ஆண்டுகள் பின் நோயால் பீடிக்கபட்டவர் எனவும் தடுத்து நீரில் விழுந்த போது அவருக்கு பின் ஏற்பட்டு உள்ளது என சட்ட வைத்தியர் தெரிவித்தார்.
என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
