மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.31.05.2023.

அரச பேருந்து தனியார் வேன் ஒன்றும் மஸ்கெலியா நோட்டன் நெடுஞ்சாலையில் திபட்டன் பகுதியில் மோதிக் கொண்டன.
நோட்டன் பகுதியில் இருந்து வந்த அரச பேருந்தும் மஸ்கெலியா பகுதியில் இருந்து சென்ற தனியார் வேன் ஒன்றும் மோதி கொண்டன.
பேருந்து சாரதி வேன் செல்வதற்கு இடம் ஒதுக்கி கொண்டு இருக்கையில், வேன் சாரதி வேனை நகர்த்த முற்பட்ட போது பேருந்தின் முன் பகுதி வேனில் உள்ள விபத்து தடுப்பு பப்பரில் பட்டுள்ளது.

இதனால் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சிரிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.
