மஸ்கெலியா விசேட நிருபர் செ.தி.பெருமாள்.03.06.2023.
இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் கடலை அவித்து தானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வைத்தி அதிகாரி எச்.ஈர்ஷாட் அவர்களும் வைத்திய சாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்கள் வைத்தியர்கள் மேற்கொண்டனர்.

நிகழ்வில் மஸ்கெலியா சுமனாராம விகாரையின் பௌத்த குருவான தப்போ வன தேரரின் மத போதனை நிகழ்வு இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து அங்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் ரக்காடு கிராமத்தில் இயங்கும் அதிரடி படையினர் நகர வர்த்தகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

