மஸ்கெலிய நிருபர் செ.தி.பெருமாள்.03.06.2023.
இன்று மதியம் 12 மணிக்கு மஸ்கெலியா பேருந்து தரிப்பிடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் தனியார் பேருந்து நடத்துனர்கள் மேற்கொண்டனர்.

நிகழ்வில் மஸ்கெலியா சுமனாராம விகாரையின் பௌத்த குருவான தப்போ வன தேரரின் மத போதனை நிகழ்வு மஸ்கெலியா சன்முக நாதர் ஆலய குருக்கள் கிறிஸ்தவ தேவாலய ஆயர் மஸ்கெலியா ஜும்மா பள்ளிவாசல் மத குரு ஆகியோர் மத அனுட்டானம் இடம் பெற்றது.

அனைத்து தொடர்ந்து அங்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் ரக்காடு கிராமத்தில் இயங்கும் அதிரடி படையினர் நகர வர்த்தகர்கள் கலந்து கொண்டதுடன் தனியார் பேருந்து சாரதிகள் தனியார் பேருந்து நடத்துனர்கள் மற்றும் கிராம மக்கள் அன்னதானம் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

