மொனராகலை ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவில் மினிபுரகம கும்புக்கன் ஓய ஆற்றில் நீராடச் சென்ற மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாலியாவில ஒக்கம்பிட்டிய பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவன் தனது பெற்றோருடன் மினிபுரகம பெரளியமங்கட கும்புக்கன் ஓய ஆற்றில் நீராடச் சென்ற வேளை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் மொனராகலை பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் என்பதுடன் தற்போது இடம்பெறும் சாதாரண தர பரீட்சையினை எழுதும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை ஒக்கம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.