கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலரக்கிந்த கிராந்துருகோட்டை பகுதியில் வீடொன்றில் வசித்து வந்த 36 வயதுடைய தாயையும் 14 வயதுடைய குறித்த தாயின் மகளையும் தாக்கி இருவரையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தியத்தலாவ இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவரும் கொட்டகலை இராணுவ முகாமில் கடமையாற்றும் மேலும் ஒரு இராணுவ வீரரும் கிராந்துருகோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
