நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளிலும் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலை – மட்டுக்க்கலை பிரதேசத்திற்கிடையில் பாரிய மரம் ஒன்று வீதியின் குறுக்கே விழுந்துள்ளதால் 1 மணித்தியாலமாக தலவாக்கலை – நுவரெலியா வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மரத்தை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

