இந்தியாவின் லக்னோ நீதிமன்ற வளாகத்திற்குள் புதன்கிழமை (7) துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
லக்னோ நீதிமன்ற கட்டடத்துக்கு வெளியே இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் சஞ்சீவ் ஜீவா என்ற பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
அதேநேரம், இந்த துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியும் ஆறு வயதுடைய சிறுமி ஒருவரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சட்டத்தரணி போல் உடை அணிந்து நீதிமன்ற வளாகத்திற்குள் வந்து சஞ்சீவ் ஜீவா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்க்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறெனினும் துப்பாக்கி பிரயோகம் முன்னெடுத்த நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.