மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.09.06.2023.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து முதல் கட்டமாக சாமிமலை நகரில் இருந்து ஆரம்பமான கதிர்காமம் பாதயாத்திரை நேற்று 07.06.2023 மாலை 6 மணிக்கு மஸ்கெலியா நகருக்கு வந்தது மீண்டும் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடை பயணமாக நோர்வூட் நகரில் உள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தை நோக்கி சென்று, அங்கிருந்து தலவாக்கலை நகர் வரை நடை பயணமாக செல்ல உள்ளனர்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைப்பயணமாக கதிர்காமம் செல்ல உள்ளனர்.
அவர்கள் அனைவரும் எதிர் வரும் 19 ம் திகதி காலை கதிர்காமம் முருகன் ஆலயம் சென்று தரிசனம் செய்ய உள்ளனர்.