வாகனங்களை வாடகைக்கு பெற்று கொண்டு குறித்த வாகனங்களை ஈடு வைத்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட 33 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் இன்றைய தினம் நமுனுகுல பொலிஸாரினால் பசறை நமுனுகுல வீதி கொட்டுக்காத்தன்னை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் வாகனங்களை வாடகைக்கு பெற்று குறித்த வாகன உரிமையாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் முகமாக இரண்டு மாதங்களுக்கு தவறாது வாடகைப் பணம் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் குறித்த நபரின் தொலைபேசியும் இயங்காமையினால் குறித்த நபருக்கு வாகனங்களை வாடகைக்கு கொடுத்த உரிமையாளர்களினால் நமுனுகுல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் முன்னாள் இராணுவ வீரரான 33 வயதுடைய கலகும்புர நமுனுகுல பகுதியை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை விசாரணைகளின் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நமுனுகுல பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
