மஸ்கெலியா விசேட நிருபர்
செ. தி.பெருமாள்.09.06.2023.
இன்று மதியம் 4 மணிக்கு மஸ்கெலியா ஸ்ரீ சண்முக நாதர் ஆலயத்தில் இருந்து சுமார் முப்பது மேற்பட்ட பக்தர்கள் நடை பயணமாக கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை ஆரம்பித்தனர்.
இவர்கள் மங்கள வாத்தியம் முழங்க தங்களது பயனத்தை மஸ்கெலியா ஸ்ரீ சண்முக நாதர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு நகர் வழியாக சென்றமை குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் இந்த நடை பயணம் நோர்வூட் டிக்கோயா ஹட்டன் வரை சென்று ஹட்டன் நகரில் உள்ள மானிக்க பிள்ளையார் ஆலயத்தில் தங்கி இருந்து நாளை காலையில் மீண்டும் தங்களது பயனத்தை ஆரம்பித்து எதிர் வரும் 19 ம் திகதி கதிர் காம கொடி ஏற்றதன்று கதிர்காமம் முருகன் ஆலயம் சென்று வழிபட உள்ளனர்.
இந்த குழுவில் செல்வோர் கதிர்காமம் ஆரம்பம் முதல் முடிவு வரை அங்கு தங்கி இருந்து அன்றாட சிறமதான பணியில் ஈடுபட்டு கதிர்காமம் நிறைவு தினம் மீண்டும் தங்களது சொந்த இல்லங்களுக்கு திரும்ப உள்ளனர்.