புஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவுக்குபட்ட டெல்டா (காச்சா மலை) தோட்ட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

புஸ்ஸல்லாவை தோட்ட பகுதியில் இருந்து ஹேவாஹேட்ட முல்லோயா தோட்டத்தில் இடம்பெற்ற மரணசடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்களே இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் பயணித்த வேன் சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துகுள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் காயமடைந்த நபர்கள் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.