தற்போது மலையக பகுதிகளில் பெய்து வருகின்ற கடும் மழை காரணமாக தோட்ட பகுதிகளில் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் பல பாதைகள் காணப்படுகின்றன.

அப்படியான பாதைகளில் ஒன்றுதான் அக்கரப்பத்தனை நகரிலிருந்து மெராயாவுக்கு செல்லும் பாதையில் காணப்படும் நல்லத்தண்ணி மற்றும் குடமல்லி ஆகிய தோட்டங்களுக்கு இடைப்பட்ட பாதையின் சீரற்ற நிலைமை ஆகும்.
சுமார் ஐந்துக்கும் மேற்ப்பட்ட அரச பாடசாலைகள், அப்பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், வாகன சாரதிகள், தினத்தொழிலாளர்கள் முதலிய ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் இப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த அரசாங்கத்தில் திருத்தப்படவிருத்த 500 மீற்றர் பாதையில் எஞ்சிய 200 மீற்றர் பாதை திருத்தப்பாடாது கைவிடப்பட்டது. இப்பகுதியில் பயணிப்பது கடினமாக உள்ளதினையும், மக்கள் பலதடைவைகள் வழுக்கி விழுந்ததினையும் ஊடகங்கள் சுட்டிக்காட்டி இருந்தபோதும் இதுவரை பாதை திருத்தப்படவில்லை.
ஆகவே இந்த நிலையில் மக்கள் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வை கோரி நிற்கிறார்கள்.
செய்தியாளர் த.சரத்
