கடந்த 16ஆம் திகதி இரவு மடுல்சீமை எகொடவத்தை, மெதவெலகம பகுதியில் அமைந்துள்ள வீட்டில் இருந்த இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்தனர்.
வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்கள் வீட்டில் இருந்த 170000 ரூபா பணம் மற்றும் 30000 ரூபா பெறுமதியான ஒரு ஜோடி தங்க கம்மல்களை திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
92 வயதான தாயும் அவரது மகளும் இந்த வீட்டில் வசித்து வருவதுடன் கடந்த 16ஆம் திகதி மாலை உடல் நலக்குறைவு காரணமாக அயலவருடன் பதுளை பொது வைத்தியசாலைக்கு மகள் சிகிச்சைக்காக சென்றதால் வயோதிப தாய் மாத்திரமே இரவில் வீட்டில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா