இன்று (23) அதிகாலை 1 மணியளவில் கொழும்பு வார்ட் பிளேசில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து உயிரிழந்த நிலையில் 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.என பொலிஸார் தெரிவித்தனர்.
கருவாத்தோட்டம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் குறித்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த முச்சக்கரவண்டி தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடத்திய விசாரணையில் அது மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடையது என தெரியவந்ததையடுத்து குறித்த நபரிடம் இது குறித்து கேட்ட போது , முச்சக்கரவண்டியை உயிரிழந்த நபரான தனது மைத்துனருக்கு வாடகைக்கு செலுத்த வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
