ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 03 ஆம் திகதி பிற்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் பத்திரிகை பணிமனைக்கு சென்றிருந்தோடு, அதன் ஊழியர்களையும், ஏனைய ஊடகவியலாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டியது அவசியம் என்பதை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன, மத பேதமின்றி நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் இலங்கையர் என்ற வகையில் அனைவரும் ஒன்றுபட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
