உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களினால் நடைமுறைப்படுத்தப்பட்ட “ப்ளாண்ட் 4 மதர்” திட்டத்துடன் இணைந்து முதிரை மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரின் தலைமையில் இன்று (8) பத்தரமுல்லை சந்துன் உயன வளாகத்தில் நடைபெற்றது.
இதனை இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்தது.
இதன்போது, இந்து – இலங்கை பாராளுமன்ற நட்புறவு ஒத்துழைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், வி. ராதாகிருஷ்ணன், ஜகத்குமார மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யு.எஸ். சத்யானந்த உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முனீரா அபூபக்கர்
