தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது . குறித்த நீர்த்தேக்கத்தில் சடலம் ஒன்று மிதப்பபதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து சடலத்தை மீட்டெடுக்கும் பணியில் பொலிஸாருடன் பொது மக்கள் ஈடுபட்டுள்ளனர். சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் தொடர்பான விசாரனைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
