தேயிலை பயிரிடப்படாத அரசாங்க மற்றும் தனியாரின் காணிகளை பெருந்தோட்டத் காணிகளை, தொழிலாளர்களுக்கும் தொழிலற்ற இளைஞர்களுக்கும் வழங்கி அவர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.ருவான்வெல்லயில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றப்படும் அவர்களின் பங்களிப்பைத் தேயிலை உற்பத்திக்குப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் தருவதாகக் கூறி, 1,350 ரூபாய் தந்துள்ளனர்.
மோசடியான மற்றும் போலி வாக்குறுதிகளை வழங்குகின்றனர்.
ஆகவே, எமது ஆட்சியில், தேயிலை பயிரிடப்படாத அரசாங்கம் மற்றும் தனியாரின் காணிகளை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், தொழிலற்ற இளைஞர்களுக்கு வழங்கி அவர்கள் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றப்படுவர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நினைத்தபடி நாட்டில் சுற்றுப்பயணம் செல்கின்றார்.
அடியாட்களுக்கும் நண்பர்களுக்கும் ஒப்பந்தங்களை வழங்கி இலாபங்கள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.
மக்கள் ஏழ்மைக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மூன்று வேளையும் உணவு உண்ண முடியாத மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் ஏழ்மையிலிருந்து மக்களை மீட்டெடுக்கின்ற யுகத்தைச் செப்டம்பர் 21 ஆம் திகதி உருவாக்குவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
