கனடா வான்கூவர் பகுதியிலுள்ள கட்டிடமொன்றிலிருந்து பெண் ஒருவரும் பாடசாலை செல்லும் சிறுமி ஒருவரும் கீழே விழுந்து பலியாகியுள்ளனர்.
உயர் அடுக்கு மாடி ஒன்றிலிருந்து இருவரும் கீழே விழுந்து பலியாகியுள்ளதாகவும் இந்தச் சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போதிலும் இருவரையும் உயிருடன் மீட்க முடியவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் இணைந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வான்கூவர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
