Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

August 19, 2026

19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

August 19, 2026

பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

August 19, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்த்து கேள்வி கேட்கும் துணிச்சல் இருந்தமையினாலேயே சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவில்லை : ரிஷாட் பதியுதீன்
இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்த்து கேள்வி கேட்கும் துணிச்சல் இருந்தமையினாலேயே சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவில்லை : ரிஷாட் பதியுதீன்

ThanaBy ThanaAugust 28, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பொத்துவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் 21 ஆவது பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சி தாவும் அரசியல் முறையை இல்லாது செய்வதற்கான புதிய சட்டம் தங்களது அரசாங்கத்தில் கொண்டு வரப்படும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சிலருக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைக்கப்பெற்றதன் பின்னர் தாய் தந்தையர் மற்றும் அவர்களின் பிறப்பு என்பன மறந்து போய் விடுகின்றன. 

மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட சிலர், நல்லடக்கமா? தகனம் செய்வதா? என்கின்ற பிரச்சினையின் போது கோட்டாபய ராஜபக்சவுக்கு கையை உயர்த்தினார்கள்.

எனினும், முஸ்லிம் மக்களுடைய கலாசார மற்றும் மார்க்க உரிமையைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டது.

அதேநேரம், மக்கள் கொடுத்த வரங்களை சிலர் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களுக்காக விற்பனை செய்திருக்கின்றார்கள்.

ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்குத் தாவுகின்ற அரசியலுக்கு ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

தங்களது சுயலாபங்களுக்காகக் கட்சி மாறுகின்ற அரசியலை நிறுத்துவதற்கு தற்போதைய சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், சர்வதேசம் ஏற்றுக்கொண்ட பொருளாதார நிபுணர்கள் சஜித் பிரேமதாசவுடனேயே உள்ளதாக தெரிவித்தார்.

அதேநேரம் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்த்து கேள்வி கேட்கும் துணிச்சல் இருந்தமையினாலேயே சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவில்லை என குறிப்பிட்டார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

    August 19, 2026

    இலங்கை காவல்துறை வெளியிட்ட வாடகை வாகனப் பயணிகள் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்

    August 19, 2026

    உயர்கல்விக் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு: வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

    August 19, 2026
    Editors Picks

    தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

    August 19, 2026

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

    August 19, 2026

    நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

    August 19, 2026

    தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

    August 19, 2026

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

    August 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.