யாழ்ப்பாணத்தில் டிப்பர் வாகனம் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 17 வயதான வினுதா விஜயகுமார் என்ற மாணவியே உயிரிந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டுள்ளார்.
