Project Nenathambara மற்றும் Acer அமைப்பும் இணைந்து பேராதனை பல்கலைக்கழகத்தில் நடாத்திய LINE QUEST என்ற போட்டியில் ஹட்டன் – ஹைலண்டஸ் கல்லூரி மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
கண்டி, கொழும்பு உள்ளிட்ட 16 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்குபற்றியிருந்த நிலையில், ஹைலண்டஸ் கல்லூரியிலிருந்து இப்போட்டியில் கலந்துகொண்ட Team Kraken அணியைச் சேர்ந்த ஆர். சாய் கௌசிக், கே. பிரதுஸன், எல். திவேஸ்கர், பி. பேர்னாட்சன், கே. கஜேந்திரநாத் ஆகிய மாணவர்களே இப்போட்டியில் வெற்றிப்பெற்று பாடசாலைக்கு பெருமைச் சேர்த்துள்ளனர்.