சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்காக, அரசாங்கமும் சர்வதேச அமைப்புகளும் இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இன வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த முயற்சிகள் தொடரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் சிலர் இன நல்லுறவைப் பாதிக்கும் வகையிலும் அவதூறாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, இது தொடர்பான போலித் தகவல்களையோ அல்லது முரண்பாடான பதிவுகளையோ பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்முனை தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி எச்சரித்துள்ளார்.
