இன்றுகாலை முதியவர்களான கணவன், மனைவி ஆகியோர் கந்தோலோயா காட்டுப்பகுதிக்கு விறகு தேடி சென்றுள்ளனர் ,கணவன் வழிமாறிய நிலையில் தன்னை காப்பாற்றுமாறு சத்தமிட்டுள்ளார் .கணவனின் சத்தம் கேட்டு தேடி சென்ற மனைவிக்கு அவரை கண்டுபிடிக்கமுடியாமல் அவரும் வழிமாறி கித்துல்கலை பகுதியில் கிராமம் ஒன்றுக்கு சென்ற நிலையில் அங்கிருந்து தொலைபேசி மூலம் ஊருக்கு தகவல் அனுப்பிருக்கிறார்,இன்று மாலை சிலர் காட்டுக்குள் சென்று தேடிய நிலையில் முதியவர் தொடர்பில் தகவல் இல்லை எனவும் அடர்ந்த காடு என்பதால் தேடுவதில் சிரமம் என திரும்பி வந்துள்ளனர்.
