பாடசாலை மாணர்களுக்கு காகிதாதிகள் வழங்குகின்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஆறுதல் (அஸ்வெசும) நலன்புரி நன்மைகள் கிடைக்காத ஏனைய தகைமையுடைய குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கு 6,000/- ரூபா வீதம் காகிதாதிகள் கொடுப்பனவை வழங்குவதற்கும், குறித்த கொடுப்பனவை வவுச்சர் ஒன்றின் மூலம் வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று (07) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.
