Let’s fly அமைப்பினால் இரண்டாவது முறையாக நடாத்தப்பட்ட மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்று போட்டி நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் 18.19(18/01/25)0, திகதிகளில் நடைபெற்றது. இப்போட்டில் முதல் நாள் நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 16 அணிகளின் பலபரீட்சை நடத்தியது.
இப்போட்டிகளில் இஸ்கிராப் தோட்டத்தைச் சேர்ந்த சன் பேட்ஸ் அணியினர் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. 2 வது நாள் நாடு முழுவதிலும் இருந்து 16 அணிகளின் பங்குப் பற்றி காலி வி. கழகத்தினர் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இப்போட்டி தொடரின் இறுதிப் போட்டியில் இறுதிப்போட்டியில் காலி வி. க 2.0 என கிண்ணத்தை வென்றது. 2ஆம் இடத்தை இஸ்கிராப் தோட்டத்தைச் சேர்ந்த சன் பேட்ஸ் விளையாட்டு கழகத்தின் பெற்றுக் கொண்டனர். சிறந்த வளர்ந்து வரும் இளம் வீரராக சன் பேட்ஸ் அணியின் ரா. மதுசான் தெரிவாகினார்.

