Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பொரலஸ்கமுவவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 74 வயது முதியவர் உயிரிழப்பு!

September 4, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது: வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

September 4, 2026

தெரேசியா தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி சிறுத்தை கடியில் படுகாயம்!

September 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தமிழ் ஊடகர்கள் தொடர்பில் கனடாவின் கரிசனை தொடரும்-கனேடிய தூதுவர் வோல்ஸ்.
இலங்கை

தமிழ் ஊடகர்கள் தொடர்பில் கனடாவின் கரிசனை தொடரும்-கனேடிய தூதுவர் வோல்ஸ்.

ThanaBy ThanaMay 1, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திடம் உறுதியளித்தார் கனேடிய தூதுவர் வோல்ஸ்.

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தமிழ் ஊடகர் படுகொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெறவேண்டும் .அதற்கு சர்வதேச சமூகம் அழுத்தங்களை வழங்க வேண்டுமென அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸிடம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸுக்கும் அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திற்குமிடையிலான சந்திப்பு புதன்கிழமை (30 ஆம் திகதி ) கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் தே .செந்தில்வேலவர் தலைமையிலான நிர்வாக குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டு ,தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தூதுவருக்கு எடுத்துக்கூறினார்.

கடந்த காலங்களில் தமிழ் ஊடகர்கள் படுகொலை செய்யப்பட்டமை , அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணை இதுவரை இடம்பெறாமை குறித்து இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டிய ஒன்றிய உறுப்பினர்கள், அவற்றுக்கு நீதி தேவை என்பதை வலியுறுத்தியதுடன் அதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் வழங்கவேண்டுமென வலியுறுத்தினர்.

இப்போதும் தமிழ் ஊடகவியலாளர்கள் தங்களது தொழிலை செய்யும்போது அரசியல் உட்பட்ட பல்வேறு தரப்புகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாகவும் , புதிய ஆட்சியின் கீழும் இந்த நிலைமை தொடர்வதையும் தூதுவரிடம் சுட்டிக்காட்டிய ஒன்றிய உறுப்பினர்கள் , மறைமுகமான சுய செய்தித் தணிக்கைக்கு ஊடகர்கள் பணிக்கப்படுகிறார்கள் என்றும் விபரித்தனர்.

தமிழ் ஊடகர்கள் தங்களின் தொழில்பயிற்சிக்கு கனேடிய அரசு இயன்றவரை உதவுமென இந்த சந்திப்பில் உயர்ஸ்தானிகர் வோல்ஸ் உறுதியளித்தார். அதேபோலன் தமிழ் ஊடகர்கள் தொழில் செய்யும்போது ஏற்படும் அவதானங்கள் தொடர்பில் கனடா தொடர்ந்தும் கரிசனை கொண்டிருக்கும் என்றும் அவர் இந்த சந்திப்பில் குறிப்பிட்டார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பொரலஸ்கமுவவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 74 வயது முதியவர் உயிரிழப்பு!

    September 4, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது: வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

    September 4, 2026

    பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று கைது! 

    September 4, 2026

    கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

    September 3, 2026
    Editors Picks

    பொரலஸ்கமுவவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 74 வயது முதியவர் உயிரிழப்பு!

    September 4, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது: வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

    September 4, 2026

    தெரேசியா தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி சிறுத்தை கடியில் படுகாயம்!

    September 4, 2026

    பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று கைது! 

    September 4, 2026

    பொரலஸ்கமுவவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 74 வயது முதியவர் உயிரிழப்பு!

    September 4, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது: வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

    September 4, 2026

    தெரேசியா தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி சிறுத்தை கடியில் படுகாயம்!

    September 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.