நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக சர்ச்சைக்குரிய விமானங்களைக் கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விசாரணைகளுக்காக, அவர் இன்று (04) முற்பகல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.
அங்கு அவரிடம் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட பின்னரே, அதிகாரிகள் அவரை அதிகாரப்பூர்வமாகக் கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷவை வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
