இலங்கை விமானச் சேவை (SriLankan Airlines) ஏயர்பஸ் (Airbus) ஊழல் வழக்கு: பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (04) கைது!
ஏயர்பஸ் நிறுவன விமானக் கொள்வனவு தொடர்பான சர்ச்சைக்குரிய இலஞ்ச ஊழல் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சப் பெறுகை மற்றும் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
