சீரற்ற வானிலை காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை (06) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பிரதேசத்தில் நிலவும் தற்போதைய வானிலையைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பகுதியில் பெய்த பலத்த மழை மற்றும் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டே ஹட்டன் வலயப் பாடசாலைகளைத் தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
