தலவாக்கலை பாரதி மகா வித்தியாலய மாணவன் குனசேகர் சிருஷ்டிகன் 182 புள்ளிகளைப் பெற்று புலமை பரிசில் பிரீட்சையில் நுவரெலியா கல்வி வலயத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தின் மாணவன் குனசேகர் சிருஷ்டிகன் 182புள்ளிகளைப் பெற்று நுவரெலியா கல்வி வலயத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் குனசேகர் பிரபா தம்பதியின் செல்வப் புதல்வன் ஆவார். அத்தோடு தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளுக்கமைய தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தில் 7 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளனர். அத்தோடு நுவரெலியா கல்வி வலயத்தில் தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயம் 9 வது இடத்தைப் பிடித்துள்ளது.
